கடையில் கடவுள் படத்தில் ஒட்டியிருக்கும் விலை பட்டியை பார்க்கும் போது - சிரிப்பு வருது
மனித உரிமைக்கும் சுகந்திரத்திற்கும் போரடியவர் வீட்டில் கிளிக்கு கூடும் நாய்க்கு சங்கிலியையும் இருப்பதை பார்க்கும் போது - சிரிப்பு வருது
பகுத்தறிவு உள்ள ஓரே உயிரினம் மனிதனமாம் முகப்புத்தக பக்கங்களை திருப்பும் போது - சிரிப்பு வருது
கோவிலுக்கு அருகில் கிடக்கும் கற்களை பார்க்கும் போது - சிரிப்பு வருது
அட..... கடிகாரதிலும் திகதியிலும் இருப்பது இலக்கங்கள் தான் என நினைவுவருகையில் - சிரிப்பு வருது
இயற்கை இலவசமாக கொடுத்த யாவும் வியாபாரப் பொருளாகி போனதை நின்னுகையில் - சிரிப்பு வருது
உண்பதற்காக உழைக்கும் மனிதன் உண்ணாமல் உழைப்பதை பார்கையில் - சிரிப்பு வருது
ஆடம்பரத்தை அத்தியவசிய தேவை என நம்பிக்கை ஊட்டும் தொலைகாட்சி விளம்பரங்கள் பார்கையில் - சிரிப்பு வருது
முதளாலிகளுக்கு சேவை செய்ய தொழில் அடிமைகளை உருவாக்கும் கல்விமுறையில் படிகையில் - சிரிப்பு வருது
மாதங்கள் மனிதனை மனிதன் ஆக்கிறதாம் அப்படி என்றால் நாம் இயல்பாக மிருகங்கள் தானோ என என்னுகையில் - இடைவிடாது சிரிப்பு வருகிறது
சிரித்துக்கொண்டே இருக்கிறேன் என் சிரிப்பு இங்கு எவரையும் தொல்லை செய்யவில்லை காரணம் இந்த இடத்தின் பெயர் மனநல மருத்துவமனையாம்.
ஹா..ஹா... ஹா..ஹா...
ஹா..ஹா...
ஹா..


0 கருத்துகள்