தன்
கவலை சோகம் அழுகை
யாவற்றையும் தனக்குள் இருக்கமாக அடைத்து விட்டு
இவன் திமிர் பிடித்தவன் என்ற பெயரை வாங்கி கொள்ளும் ஆண் கல்நெஞ்சக்காரன் தான்
தன் சோகத்தை சேர்த்து வைத்து
அழுவதுக்கு நேரம் இன்றி
ஓர் இரவில் விளக்கை அணைத்து விட்டு தலையணை நனைய கௌரவ அழுகை அழும் ஆண் கல்நெஞ்சக்காரன் தான்
சுடு சொல் தன்னை சுட்டு விட்ட போதிலும்
சிரித்து கொண்டே தன்மானம் இழந்தவனாக அங்கிருந்து நகரும் ஆண் கல்நெஞ்சக்காரன் தான்
அலுவலகத்தில் தலை குனிந்து குனிந்து நின்று விட்டு வீடு வந்ததும் அதை நான் பார்த்தது கொண்கிறேன் என்று தலை நிமிர்த்தி சொல்லும் ஆண் கல்நெஞ்சக்காரன் தான்
தன்மானம் இடம் கொடுக்காத நேரத்தில் கூட தன் குடும்பத்தை எண்ணி தலை குனிந்து கொள்ளும் ஒவ்வொரு ஆணும் கல்நெஞ்சக்காரன் தான்
திரை கடல் ஓடி திரவியம் தேடி தன்னை மாய்த்து கொள்ளும் ஆண் புரிதலுக்கு அப்பாற்பட்ட வனாக தான் கருதப்படுகிறான்
உணர்தல் புரிதல் அல்லவா !


0 கருத்துகள்