வறுமையின் நிறம் சிகப்பு என்று யார் சொன்னது  வறுமை நிறம் அற்ற ஒரு கறுப்பு உலகம்


இளமையில் வறுமை கொடியதாம். முதுமையிலும் வறுமை கொடியது என தினமும் உணர்த்தி விடுகிறார் சாலையோரம் தினமும் படுத்து உறங்கும் முதியவர்

மதிய உணவிற்குப்பின் சிற்றுண்டியாக கிழங்கு பொரியல் வாங்க கடைக்குச் சென்றேன் என் முன் வரிசையில் மதிய உணவிற்காக தெருவோர வியாபாரி நின்றுகொண்டிருந்தார்


வறுமையின் நிறம் சிகப்பு என்று ஏன் யாரும் சிந்திக்கவில்லை. வயிர் பசித்து விடும் போது மூளை எப்படி சித்திக்கும்...

சாதிக்கும் ஆசை ஏன்  இல்லை ஒருவேளை உணவு கிடைப்பதே இங்கு சாதனைதான் வாய்க்கும் வயிற்றுக்கும் நடுவே வாழ்க்கை முடிந்து விடுகிறது

சட்டமும் நீதியும் விளிம்புநிலை மனிதர்கள் மேல் தான் கூர்மையாகப் பாய்கின்றன  ஆனால் அதிகாரமும் பணமும் தேங்கிய இடத்தில் கொஞ்சம் வலுக்கத்தான் செய்கிறது

எம்மிடம் அளவுக்கதிகமாக அன்பு இருந்தாலும் கடைக்காரர் காசேதான் எதிர்பார்ப்பான் 


சில யதார்த்தங்கள் சுட்டு
விடுகிறது இப்படி