ஒரு ஊரில் புத்த துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார் அவர் சிறுபிள்ளைகளுக்கு பாடம் கற்பித்து வந்தார். ஒரு நாள் ஒரு சிறுவன் அவரிடம் வந்து சுதந்திரம் என்றால் என்ன அப்படி என்று கேட்டான் அதற்கு அந்தத் துறவி சிரித்துக்கொண்டு இதை ஏன் கேட்கிறாய் என்றார் அதற்கு அச்சிறுவன் எனது பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டனர் அப்போது இருவரும் மாறி மாறி உன்னால் தான் என் சுதந்திரம் பறிபோய் விட்டது என சொல்லி சண்டை பிடித்தனர் அதனால்தான் இந்தக் கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன் என்றான். அதற்கு அந்தப் புத்த துறவி ஒரு பலூனை எடுத்து வேகமான வெளியே வீசி எறிந்தார் அந்த பலூனும் காற்றில் மிதந்து சென்றது அப்போது அந்த புத்த துறவி அச்சிறுவனை பார்த்து இந்த பலூனை போல கட்டுப்பாடின்றி காற்று வீசும் திசை எல்லாம் செல்வதே சுதந்திரம் என்றார். அதன்பின் சில நாட்களுக்குப் பிறகு அச்சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டான் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது.
நாட்கள் கடந்து ஓடின. அந்தத் துறவியும் வயது முதிர்ந்தவர் ஆனார்.ஒரு நாள் அவர் இறக்கும் தருவாயில் இருந்தார் அப்போது அவரை காண பல நபர்கள் அங்கு வந்திருந்தார்கள் அப்போதும் அனைவரும் அவரை சுற்றி இருந்தனர். ஆனால் அவர் உயிர் பிரியவில்லை. எதையோ சிந்தித்தபடி வீட்டுக் கூரையை பார்த்த வண்ணம் இருந்தார். அப்போது ஒரு இளைஞன் அவரை காண அங்கு வந்தான். எல்லோரும் யாரு இந்த புதுமுகம் அப்படி என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த இளைஞனும் அவர் அருகில் வந்து அமர்ந்து அவருடன் பேச ஆரம்பித்தான். எல்லோருக்கும் ஆச்சரியம் அவன் பேசுவதை துறவி கவனிக்கத் தொடங்கினார். நான் ஒரு தேசாந்திரி இந்த உலகம் முழுவதும் சுற்றித் திரியும் ஒரு நாடோடி . நான் உங்களிடம் ஒன்றை சொல்லி விட்டு போகலாம் என்று வந்தேன் என்றான். சுற்றியிருந்த அனைவரும் அவன் என்ன சொல்லப் போகிறான் என உன்னிப்பாக பார்த்தனர் ஆனால் அவனோ எதுவும் கூறாமல் தனது பையிலிருந்து ஒரு பலூனை எடுத்தான். சுற்றியது அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை ஆனால் அவனோ அந்த பலூனில் முடிச்சை அவிழ்த்து அந்த காற்று வெளியில் பரவ விட்டான் பலூனில் காற்று முழுதுமாய் போனவுடன் அந்தத் துறவியைப் பார்த்து ஐயா சுதந்திரம் என்பது யாதெனில் நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்று நம்மை சுற்றி வீசும் காற்றில் கலப்பது போல் யாவும் யாதுமாய் இருப்பதே உண்மையான சுதந்திரம் என்றான் . பின்பு அவன் அந்த இடத்தைவிட்டு புறப்படுவதற்கு முன் அந்தத் துறவியைப் பார்த்து சில மனங்களும் இந்த பலூன் காற்றைப் போல தன்னை ஒரு சிறைக்குள் அடித்துக்கொண்டு காற்றில் பறந்து திரிகின்றன சுதந்திரத்தை தேடி..... இவ்வாறு கூறி அவன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான் அந்தத் துறவியும் ஏதோ புரிந்த நிறைவுடன் இறுதியாக சிரித்துவிட்டு உயிர் துறந்தார்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"