Profession: Computer Graphic Designer & Instructor
Passion : Writing ( Blog, Script , Story )
Email : ggrashiyan@gmail.com
T.P : 075 7738872
Facebook : Charles Grashiyan
அடிக்கடி மனிதர்கள், மனிதன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய் அப்போ நீ யாரு? என்று நீங்கள் கேட்கலாம். நான் என்னை இவ் உலகில் வாழும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு போல ஒரு உயிரினமாக மட்டுமே நினைக்கிறேன். கடவுளின் சாயலான மனிதனாகவோ , அனைத்து உயிர்களிலும் தனித்துவ ஆறறிவு கொண்ட ஒரே இனமான மனிதனாகவோ நினைக்கவில்லை அதுதான் அடிக்கடி இப்படி சொல்லி விடுகிறேன்.
மரபிற்கும் விஞ்ஞானத்திற்கும் நடுவில் நம் புரிதலும் உணர்வும் அங்கும் இங்கும் அலக்கழிக்கப்பட்ட களைப்பில் மயங்கி உறங்கி விடுகிறது. இங்கு உறங்குவது போல சிலர் நடிக்கவும் செய்கின்றனர். காரணம் தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டால் இவ்வுலகில் இருந்து வேறாக்கப்படுவாய். வாழ்கை என்ற தனிப்பெரும் பொருள் கையை விட்டு போய்விடலாம் என்ற பயம். நம் பயம் - யானையை சங்கிலியில் கட்டியது போல சங்கிலி சிறைப்படுத்தவில்லை. கட்டப்பட்டு விட்டோம் என்ற எண்ணமே சிறைப்படுத்தியது யானையை … என்பதை போல
என்னைப்பற்றி கூறுவாதாக சொல்லிவிட்டு சம்மந்தம் இல்லாமல் பேசுகிறேன் என்று தானே யோசிக்கிறிர்கள். இது தான் முரண். மனிதன் தான் முரண். நம்மை பற்றி இதைத்தான் கூற வேண்டும். இந்த விடயம் இருக்கவேண்டும் என்ற ஒழுங்கமைப்புதான் முரண் . நாம் முரண் என்பதை இதை தவிர எப்படி விளக்க முடியும்.
இந்த உலகின் அதி உன்னத வாழ்வின் ரகசியம் யாரும் விடை சொல்ல முடியாத நம்மைப் பற்றிய கேள்விகள். இந்த உலகைப் பற்றிய கேள்விகள் போன்ற யாவற்றிக்கும் விடை ஒரு நியாயமற்ற (ILOGICAL) பதில் என்றால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா ? முடியாது காரணம் நியாயப் படுத்திய (LOGICAL) பதில்கள் தான் நம் நம்பிக்கைக்கு ஏற்றது அதுவே உண்மை என்று நம்மை நெறிப்படுத்தி நம் வாழ்வில் அதை வழக்கமான மாற்றிவிட்ட பின் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் எந்த ஒரு நியாத் தரவுகளும் இல்லாமல் தரவுகள் நிறுவப்படாமல் மதம் என்ற ஒன்று எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவை போல பல உங்களை சுற்றியுள்ளது சிந்தியுங்கள் … நான் மேல் கூறிய என் இரத்தம் பற்றி கதை போல …
நானும் தொடங்கிய புள்ளியும் இதுவே. இது மதம் சார்ந்தது அல்ல விஞ்ஞானம் சார்ந்ததும் அல்ல இது நம் அகிலத்தின் மூல உண்மையின் (RAW TRUTH) சிறு சிறு கூறுகள் தான் அவை. அந்த அகில உண்மையை புரிந்து கொள்ள நாம் … என் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

0 கருத்துகள்