நான் சின்ன பிள்ளை
மீன் வாங்க ஆசை பட்டது போல
சில கனவோடு கலந்த ஆசைகள் வைத்திருந்தேன்.
ஆனால்
அந்தச் சின்ன பிள்ளை தினமும் மீனுக்கு
நீரும் மாற்ற இயலாது. தீனியும் போட முடியாது.
ரசிக்க மட்டுமே முடிந்து
இங்கு அந்த கண்ணாடி குவளையில் மீன் என்பது
உவமை பொருள்
____________________________________
வீதியோரங்களில் ஒரு வேளை உணவு கனவென்றால் .
மாடிப்படிகளில் தினமும் ஒவ்வொரு உணவிற்கான கனவு.
மாடிப்படிகளில் தினமும் ஒவ்வொரு உணவிற்கான கனவு.
____________________________________
வயிறு காய்ந்து காய்ந்து உடல் உருகி
குடல் ஒட்டிப்போய்
அன்று கிடைத்த அந்த ரொட்டித் துண்டும்
தொண்டையில் சிக்கி
நீருக்காக விக்கி விக்கி இறந்து போன அவன் கண்டதெல்லாம்
தினமும் சோற்றின் கனவுகள்
குடல் ஒட்டிப்போய்
அன்று கிடைத்த அந்த ரொட்டித் துண்டும்
தொண்டையில் சிக்கி
நீருக்காக விக்கி விக்கி இறந்து போன அவன் கண்டதெல்லாம்
தினமும் சோற்றின் கனவுகள்
____________________________________
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே ,
குப்பையிலாவது பண்டங்கள் கிடைக்கட்டும்
நாயும் பூனையும் உயிர் தானே
குப்பையிலாவது பண்டங்கள் கிடைக்கட்டும்
நாயும் பூனையும் உயிர் தானே
____________________________________
பார்வையற்றவன் கனவில் என்ன வரும்?
அவன் பார்க்காத வண்ணங்களும் கண் கூசும் ஒளியும் அல்ல.
அவன் நுகர்ந்த வாசனையும் உணர்த்த தொடுகையும் மட்டுமே
அவன் பார்க்காத வண்ணங்களும் கண் கூசும் ஒளியும் அல்ல.
அவன் நுகர்ந்த வாசனையும் உணர்த்த தொடுகையும் மட்டுமே
____________________________________
நான் கண்ட கனவுகளுக்கேல்லாம் அர்த்தங்கள் தேடி அலைந்தேன்.
கனவின் அத்தனை அர்த்தங்களையும் கண்டுபிடித்தேன்.
இன்று தூக்கமும் இல்லை கனவும் இல்லை
இதுதான் அர்த்தமற்ற வாழ்க்கை என்பார்கள் போல...
கனவின் அத்தனை அர்த்தங்களையும் கண்டுபிடித்தேன்.
இன்று தூக்கமும் இல்லை கனவும் இல்லை
இதுதான் அர்த்தமற்ற வாழ்க்கை என்பார்கள் போல...
____________________________________
இரவின் இருளில் கனவுகள் வருமாம்.
கனவெல்லாம் இருள்.
அந்த இருள் தான் கனவு.
கனவெல்லாம் இருள்.
அந்த இருள் தான் கனவு.
____________________________________
ஆசை முதல் வெறுமை வரை
வெறுமை எங்கும் பரந்து விரிந்து அதில்
ஆசை உண்டாகி
ஆசையை அடைத்தது .
அடைந்த ஆசையில் மோகம் தீர
மறுபடியும் வெருமையை நோக்கி...
வெறுமை எங்கும் பரந்து விரிந்து அதில்
ஆசை உண்டாகி
ஆசையை அடைத்தது .
அடைந்த ஆசையில் மோகம் தீர
மறுபடியும் வெருமையை நோக்கி...
அடையாத ஆசையை எண்ணியெண்ணி
அடைந்த வெறுமை எனும்
உன்னத நிலையை மறந்துவிட்டோம்.
அடைந்த வெறுமை எனும்
உன்னத நிலையை மறந்துவிட்டோம்.
ஆசை முதல் வெறுமை வரை. வெறுமை முதல் ஆசை வரை.
இது முதல் வரை அல்ல. இவை முடிவிலி.
இது முதல் வரை அல்ல. இவை முடிவிலி.


0 கருத்துகள்