விளக்கு அணைந்ததும் இருள் ஒளிர்ந்தது. 
 மிளிர்ந்த இருளில் உலக உருவ பொருட்கள் அன்றி 
தெரிந்ததெல்லாம் இவ்வுலகு சாரா 
அருவப் பொருட்கள் .

"உடல் மூடிய மனதும் 
நிலை இல்ல அற்புத நினைவுகளும் கூட" 

---------------------------------------------------------------------------------------------

சந்தேகம் ...
நான் முரண்பாடு என்ற வார்த்தைக்குள் அடங்கி விட்டேன் என்று.

---------------------------------------------------------------------------------------------

என் காதுகளில் இது எப்போதும் கேட்க கூடும். 
 " ஏன் நீ சாதாரணமாக இல்லை " 

---------------------------------------------------------------------------------------------

இங்கு மனிதர்கள் அசாதாரணமாக மாறி விட்ட போது 
மிக எளிய வெறுமை அசாதாரணமாக தான் 
தெரியும் அல்லவா 

---------------------------------------------------------------------------------------------

ஒன்று உலகம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. 
மற்றொன்று 
என்னால் உலகை புரிந்து கொள்ள முடியவில்லை . 
இதில் ஏதேனும் ஒன்றுக்குள் அடங்கி இருந்தால் 
( சாதாரணமானவன் அல்ல பைத்திய காரன்) 
ஏதோ ஒரு பெயரை பெற்றிருப்பேன்.  
நானோ இதில் கலக்காது ஒதுங்கி நின்றதால்
 பெயர் இல்லா ஒன்றனேன்.

---------------------------------------------------------------------------------------------

ஆண்டாண்டு காலமாக பழகிப்போன விதிமுறைகளும். 
நடைமுறைகளும் தான் இங்கு தேவை 
நான் சாதாரணமானவன் என்று 
நிரூபிக்க...

---------------------------------------------------------------------------------------------

இந்த உலகம் முழுதும் 
உன்னத உண்மையை ஏற்க மறுக்கிறது
நாம் தற்செயல்
இங்கு எல்லாமே தற்செயல்
ஒரு புள்ளியில் எல்லாமே முடிந்துவிடலாம் 
என்பதை