அடைத்த நான்கு வெள்ளை சுவருக்குள்
உடைந்த கறுப்பு உருவம் ஒன்று
நான்…
--------------------------------------------------------
மெத்தை மேல் என்னுடல் கிடக்க
நெஞ்சின் மேல்
குத்திக் கொண்டே இருக்கிறது
வளர்வது நின்றுபோன
நம் ஞாபகங்கள்
--------------------------------------------------------
இப்போது உண்டாகியுள்ள
வெறுமை
உன்னைப் பற்றிய ஆசைகளை
நோக்கி நகர்த்துகிறது
எனக்கு தெரியும்
ஆசை எனும் உன்னை அடைந்து விட்டால்
நான் என்ற இடைவெளி வெறுமையை நோக்கி தள்ளும் என்று
வெறுமை உண்டாக்கும் ஆசைக்கும் ஆசை அடைந்த வெறுமைக்கும்
அழைக்கழிக்கப் படும்
அற்ப ஜீவி நான்…
--------------------------------------------------------
மான்கள், வரிக்குதிரைகள்
உணவல்ல... என சொல்வோர்
அறிய வாய்ப்பில்லை
பட்டினியில் உடல் மெலிந்து
கிடக்கும்
சிங்கத்தின் ஒரு பக்க கதையை…
--------------------------------------------------------
நான் முரண்பாடனவன்
என்பதை
என்னுள் விதைத்துக் கொண்டே இருக்கின்றன என் முன்னே இருப்பவரின்
பதில்கள்
0 கருத்துகள்