ஒரு கதை படித்த போது பெரிதாக ஒன்னும் தோன்ற வில்லை. அந்த கதையின் ஆசிரியரான ஃப்ரான்ஸ் காஃப்கா என்ற எழுத்தாளனை பற்றி படித்த போது உடைந்தே போய் விட்டேன். காஃப்கா ஒரு கண்ணாடி போல தன்னை பிரதிபலிப்பதாக சொல்லி நம்மை பிரதிபலித்து விடுவர்.
அவரது கதைகளில் ஒரு தனிமனிதனை சமூகம் ஓடுகுவதும் , தனி மனித உணர்வை மற்ற மனிதன் புரிந்து கொள்ள மறுப்பதும் எடுத்துரைக்கின்றது. இவரின் கதைகளின் நாயகன் உடல், சட்டம், தேவை என்ற ஏதோ ஒரு விதத்தில் சிறைபடுத்தப் பட்டிருப்பான்.
காஃப்கா தன் சொந்த வாழ்வை தன் கதைகளில் பொய்யான பெயரில் வரும் கதாபாத்திரங்களில் நடமாட வைத்திருப்பர். கதைகளின் முடிவில் மரணம். மரணம் தான் எல்லா தொடக்கத்தின் முடிவு என்பது சொல்லாமல் சொல்லி விடுவர். இந்த உடல் ஒரு சிறை. இந்த உடலுடன் சுகந்திரமாக இருப்பதுதான் மிகப் பெரிய சிறை சிறையே என்கிறான் காஃப்கா.
19 நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர் என்று போற்றப்படும் இவர். ஆங்கில இலக்கணத்தில் kafkaesque என்ற புதிய இலக்கண முறைக்கு சொந்தக்காரர். ஆனால் அவர் இறந்து பல ஆண்டுகள் கடந்த விட்டது இன்று வரை அது அவருக்கு தெரியாது.
தான் இறக்கும் வரை ஒரு அலுவலகத்தில் சாதாரண ஊழியன் ஆகவும் வாழ்க்கையில் தோற்று ஒரு எழுத்தாளனாகவும். மாபெரும் புகழ் பெற போகும் புத்தகங்கள் என்று தெரியாமல் தன் பையிலும் தன் மேஜைக்கு அடியிலும் மறைத்து வைத்திருந்தார் என்பது இதன் உச்சகட்ட துயரம். அவர் தன் நண்பருக்கு எழுதிய இறுதி கடிதத்தில் " நான் இறந்த பின் என்னுடைய புத்தகங்களை எரித்து விடுங்கள் " என்று எழுதியிருந்தார். எப்போதும் காஃப்காவின்
மனநிலையை நினைத்து பார்கிறேன்.
நான் ஏன் எழுத வேண்டும். எழுதி என்ன பயன். யாருக்கு அது தேவை ? என்ற அத்தனை கேள்விக்கு விடை Kafka தான் .
அவரின் Metamorphosis,the trial , A Hunger Artist இவை எப்போதும் அவர் பெயரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
“Even that has its reason; it is often better to be in chains than to be free.” காஃப்காவின் வரிகள் இவ்வாறு முடிகிறது.
Charles Grashiyan

0 கருத்துகள்