அடிக்கடி எட்டிய பொருள் சலித்துவிடும் ஆதலால் அதை கடந்து சென்று விடும் மானிடர் மத்தியில் அந்த தங்க வண்ண மாலை பொழுதுகளின் வெளிச்சத்தின் நடுவே வீசும் காற்றின்
வண்ணத்தில் அங்கே உரைந்து திளைத்து அங்கேயே நின்று விடும்
கலைஞன் அற்ப உலகிற்கு அப்பாற்பட்டவன் தான்.
___________________________________________________________
மாலையில் மங்கிய வெளிச்சம்
காலையில் அடித்து ஓய்ந்த மழையும்
தருகின்ற ஓர் வித நிறைவை நூற்றாண்டு கண்ட விஞ்ஞானம்
இன்னும் எட்டவில்லை என்பதுதான் மனது என்ற
ஒற்றைப் பொருள் கொண்டு வாழும் கலைஞனின் கருத்து
___________________________________________________________
இந்த இயற்கை உருவாக்கிய மனித மனம் - இது ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை வரும் வரை மனிதன் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே இருப்பான்.
___________________________________________________________
அபத்தம், அபத்தங்கலாள் சூழப்பட்டு அபத்தங்கலாள் உருவாக்கப்பட்ட அபத்தங்கலாள் கட்டமைக்கப்பட்ட இந்த மனித கட்டமைப்பு. அந்த அபத்தங்களுக்குள் வாழ்ந்துகொண்டு அதை விமர்சிக்கும் நாம் விசித்திரமானவர்கள்தான் ஆனால் இவற்றை பார்வையாளனாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞனை விட அல்ல.
___________________________________________________________
என்னை இந்த யுகாந்திரங்களுகக்கு வழியே தூக்கி எறிந்தது போல மிதந்து கொண்டே இருக்கிறேன்.
ஒரு கவிதை முடியும்வரை
ஒரு மெல்லிய காற்று என்னை தொடும் வரை.
___________________________________________________________
நீ இப்போது இழந்துவிடுவாய் என்றாள். நாளை அதிகாலை விடியலை பார்த்துவிட்டு சாகிறேன் என்பான். நாளை என்று பொய் மேல் அத்தனை நாட்டம். அந்தப் பொய்யை அடைந்துவிட...
___________________________________________________________
எப்படி இறந்து விட ஆசை ?
ஒரு மாலை நேரத்தில் என் வீட்டுக்கு வெளியே ஒரு சாய் கதிரையில் அந்த
மாலை நேரத்தின் சுகந்தத்தை
அனுபவித்துக்கொண்டே வாழ வேண்டும்.
உங்கள் நிலைப்பாட்டை பொருத்தவரை அது இறப்பது என்றால்
என் நிலைப்பாட்டை பொருத்தவரை
அதுவே வாழுதல்...
___________________________________________________________
இரவு முடிந்த ஒன்று
விடியல் வரும் என்று
மனித மனம் எப்போதும்
எண்ணுவதுண்டு
___________________________________________________________
அர்த்தமுள்ள வார்த்தைகள் முடிந்தபின் அழகான கையெழுத்தில் எழுதும் எழுத்துக்களும் வெறும் கோடுகள் கொண்ட கிறுக்கல்கள் தான்...
___________________________________________________________
இங்குக் கூறப்பட்ட யாவும் அதன் உண்மை கூரிலிருந்து பிரதி ஆக்கப்பட்ட உண்மையோடுகள் மேவபட்ட போலிகளே
___________________________________________________________
என்னை பற்றி?
கோட்பாடுகளில் முரண் போலிகளுக்கு விடைகள் என்று ஒன்று கொடுக்கப்படுவதில்லை.
இங்கு என்னைப்பற்றிய என் கேள்விகளுக்கு என் பதில்களும் முரண் போலிகளே...

1 கருத்துகள்
அற்புதமான வரிகள்
பதிலளிநீக்கு