ஜந்தறிவு நாய்யை அடித்து செல்லும் வாகங்களுக்கு எத்தனை அறிவு என்று தெரியவில்லை அதை ஓட்டும் மிருகத்திற்கு ஆறு அறிவாம். 

சாலையோர கேடுகளுக்கு அப்பால் முழுதும் எங்கள் வீடுகள் தான்

நடைபாதையோ படுக்கையறை.

சாலையில்.... வாகனங்கள் மட்டும் அல்ல நாங்களும்  தான்.


மின்சார கட்டணம் கட்டியது இல்லை தெருவிளக்குகள் எங்களுக்கு கிடைத்த வரம்.

எங்களுகக்கு நீதி மறுக்கப்படும் அநீதி நடந்து விட்டால் மறைக்கப்படும்
ஏன் என்றால்

நாங்கள் சாலையோர மனிதர்கள்.

நாங்கள் பிச்சைக்காரரும் இல்லை இழிவான உயிரினமும் இல்லை இருக்க நிரந்தர இடமற்ற உன்னைப் போல் மனிதர்கள் தான்

இந்த உலகம் இயற்கை கொடுத்த இலவசம்

ஆனால் அதில் ஓர் சதுர அடி விலைக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

இங்கு கற்களில் செய்த கடவுள்களின் மாதிரிக்கு கூட நாங்கு பக்கம் சுவர். சுற்றி அடைந்த முற்றம் உயிர் உள்ள எங்களுக்கு மட்டும் ஏன் ????

காரணம் நாங்கள் சாலையோர மனிதர்கள்

இவர்களைப் பற்றி நமக்கு  என்ன கவலை Facebook  இல் அதிகம் Like வரவில்லை என்று கவலைப்படும் தலைமுறை அல்லவா நாம்.......... 







தினமும் வீதிகளில் ஓர் இருவரைக் கடந்து செல்லும் போது கூட நாம் இதை சிந்திக்கிறோமா அல்ல சிந்திக்க மறுக்கிறோமா? கண்களை திறந்து  வைத்து விட்டு மனதை பூட்டி கொண்ட நிலைகெட்ட மாந்தர் நாம் .....