தினமும் அதிகாலையில் சாலையோரம் நின்றுகொள்கிறேன். சிறிது நேரம் ஒய்வாய் கிடந்த சாலைகளில் கூட்டம் கூட்டமாய் ஈசல் பூச்சிகள் ஓடக் கண்டேன்.

இதை பார்க்கும் என்னிடம் ஒரு சந்தேகம் தான் அடிக்கடி தோன்றும்
ஏன் எந்த ஒரு ஈசல் பூச்சியும் நின்று ஏன் ஓட வேண்டும் ? எதற்காக ஓட வேண்டும்? ஓடத்தான் இந்த பிறப்பா இல்லை ஓடினால் அந்தத்தை அடைந்து விடலாம் என்று எண்மோ! புரியவில்லை....

இதை சிந்தித்து கொண்டுடே திரும்பி பார்தேன் அடடா! என் அருகே ஒருவன் அந்த ஈசல் கூட்டத்தை பார்த்தபடி சிந்தித்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் என்னிடம் அவன் ஒன்று  கேட்டான் 'இந்த  ஈசல் கூட்டம் எப்போது சிந்திக்கும் என்று. நான் அசந்து விட்டோன் . அவனிடம் நான் கூறினேன் 'யாரோ ஒருவர் எடுத்து கூறும் வரை' . அவன் பதில் அளித்தான் 'சொல்லாதே சொல்லிவிட்டாள் உன்னை வாழத்தெரியாதவன் என்பான் உலகை தலைகீழாக புரிந்து கொண்டவன் என்பான் . ஒளி என நினைத்து  தீயில் விழுந்து மாயும் இந்த ஈசல் கூட்டம்..... நண்பா....

என்று சொல்லி அங்கு இருந்து சென்றுவிட்டான். இதை பார்த்து விட்டு அந்த ஈசல் கூட்டத்தில் இருந்து ஒரு ஈசல் என்னை நோக்கி வந்து என்னிடம் கேட்டது 'அவன் என்ன சொன்னான் ' என்று நான் ஓன்றுமில்லை என்றேன் அதற்கு அந்த  ஈசல் கூறியது 'அவனுடன் பேசதே  அவன் வாழத்தெரியாதவன் உலகை தலைகீழாக புரிந்துகொண்டவன்' என்றான் .

நானும்  என்னுள் இருந்த ஒளியை அணைத்து விட்டு 'ஆமாம்' என்றோன்.

 ஒளி என நினைத்து  தீயில் விழுந்து மாயும் இந்த ஈசல் கூட்டம் அறியாது .........................................................................................................

இதன் பாதி அறியாமல் இருந்தால் நீயும்  இந்த ஈசல் கூட்டத்தில் ஒருவன் தான்.




இப்படிக்கு
நான்
இருள் மனிதன்