“அம்மா தாயே என்ட புள்ள கூடவே இருமா” வழக்கம் போல ராசையாவின் மாலை போட்ட புகைப்படத்திற்கு அருகில் இருந்த சாமி சிலையை பார்த்து புலம்பத் தொடங்கிவிட்டாள் சோக்கி. வாசலில் பிளாஸ்டிக் போத்தல் ஒன்றைக் தன் இடுப்பில் சணல் கயிற்றால் கட்டிக் கொண்டு யார் வருகையையே எதிர்பார்த்தவனாக கொஞ்சம் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான் இருளி. மாலை 4 மணியாகி விட்டால் அந்த செம்மணல் கிரமத்தில் சலசலப்புதான். அந்த வறண்ட கிராமத்தில் வெயில் அணலுக்கும் மணற் புலுதிக்கும் பஞ்சமே கிடையாது. பஞ்சம் பழகிப் போன ஒரு செம்மணல் கிராமம் தான் சோக்கி வாழ வந்த ஊர்.
அந்த திட்டுத் திட்டான மணல் பாதையில் ஒரு சிறுவன் வா… வா… என்று சத்தமாக அலறிக் கொண்டே வந்தான். இதைக் கண்ட இருளி தன்கால்களை நிலத்தில் பலமாக அலுத்தி ஓட தயாராகினான். வீட்டிக்குள் புழப்பிக் கொண்டிருந்த சொக்;கியும் ஆவலுடன் வாசலுக்கு வந்தாள். புத்துப் பதின்மூன்று சிறுவர்கள் தட தட வேன முன்டியடித்து வீதியில் இரச்சலுடன் வந்த கொண்டிருந்தனர். இருளி தன் வீட்டைக் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஊரின் கடைக்கோடியில் ஒதுக்குப் புறமாக இருந்தால் இருளிதான் அந்த கூட்டத்தில் சேரும் கடைசி ஆள் . அந்த சிறுவர் கூட்டத்தில் மிக குறைந்த வயதுடையவனும் இருளிதான்.
சிறுவர் கூட்டம் வீட்டைக் கடக்க ஓட்டம் பிடிக்கிறான் இருளி. பெரு முச்சி விட்டு வாசலின் நிவையில் தலையை சாய்து;தக் கொண்டு “இந்த துன்பத்தில இருந்து எப்ப விடிவே தெரியா கண்னு கேட்ட கடவுளே ” என்று அழுத்துக் கொண்டால் சோக்கி. மாடுகள் போல முண்டியாடித்து மணல் புழுதியை கிழப்பியவாறு கிராம எல்லையை கடக்கின்றனர் அந்த சிறுவர் கூட்டம். அனைவர் இடுப்பிலும் பிளாஸ்டிக் கலன்கன் தடதடத்தான.
ஒருவரை ஒருவர் முந்தியடித்தும் கை கால்களை இலுத்தும் ஒடிக்கொண்டிருந்தனர். “வா வா இன்டைக்கும் நான் தான்ட முதலவதா வருவன்” என்று கரட்டை ஓலமிட்டுக் கொண்டு முன்னுக்கு சீறிப்பாய்ந்து சென்றான். எல்லோருக்கும் அவன் என்றால் பயம் ஊர் பூசாரிட மகன் என்பதால். பூசாரி என்ட தனி மாரியாதைதான் ஊருக்குள்ள ஆன கொஞ்சம் திமிர் புடிச்சவன். ஊரில் உள்ள அனைவரும் சூனியம் வைக்க அவனைத்தான் நாடுவார்கள்.
எங்கும் புளுதி கிழப்பிக் கொண்டுடிருந்தது கண் பார்வைக்கு எதுவும் புலப்படவில்லை இருளிக்கு. மணல் பாதையில் மாவு இடிக்கும் உலக்கை போல கால்களை குத்தி குத்திப் பாய்ந்து போனர் அனைவரும். இருளியும் பாயும் முடிவுக்கு வந்தான். காளை தன் முழுப்பலத்தiயும் சேர்ந்து உத்தினான் நீலத்தில் ஆனால் அங்கு இருந்த கல்தீட்டி மோத தலை நீலத்தில் அடிபட கீழே விழுந்தான் இருளி. அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை முன்டியடித்து முதலாவதாக போவதிலேயே குறியாய் இருந்தனர்.
அந்த கூட்டம் தன்னை கடந்து செல்ல அடங்கிய புளுதியின் நடுவே தன் காளை பிடித்துக் கொண்டு “அம்மா எரியுதே” என வலியல் கண்னை முடிக்கொண்டாடு அழுது கொண்டிருந்தான் இருளி. அந்தி மாலையை எட்டிவிட்டது அந்த சிறுவர் கூட்டம் ஒரு வரண்டு நிலத்ததை அடைந்தனர். அந்த ஈரமற்று வெடித்த நீலத்தின் நடுவே ஒரு அடி கூழாய் கிணறு . அந்த கூழாய் கிணற்றை கண்டதும் அனைவர் முகத்திலும் ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது. ஓட்டத்தில் வேகமும் கூடியது . ஆ…. ஆ…என்று அலறிக் கொண்டே கரட்டை குழாய்யை அடைந்தான். முன்புறமாக ஓடிவந்த அனைவரும் வாடிய முகத்துடன் குழாய் கிணறை அடைந்தனர்.
“ஏய் வா வா நான்தான்ட ஓன்னாவதா வந்தன் … முகர கட்டைகல பாரன் ஊ…. ஊ….” என்று அனைவரையும் கோலி செய்து கொண்டு தன் இடுப்பிலிருந்த பிளாஸ்டிக் போத்தளை சரியாக தனக்கு நேரக வைத்தான் ஊடனே அனைவரும் அது போலவே தங்களுக்கு நேராக வைத்தனர். கட்டை தன் காட்ச்சடடையை கழட்டி விட்டு அதனுள் சீறுநீர் கழிக்க ஆரம்பித்தான் அனைவரும் அது போலவே அவரவர் போத்தலில் சீறுநீர் கழித்தனர். அப்போது
டேய் இந்த இவண்ட முத்திரத்த பாருட மஞ்ச கட்டிய வருது
ஏன்ட அப்பேய்… ஒசில பாரன் ..உன்டது அப்புடித்தான் கிடக்கு …
போத்தலுக்க பேய்ய தெரியரியாம கிடக்கான்டா இவன்…
இப்படியா சிலாகித்துக் கொண்டு போத்தளை நிரப்பும் பணியில் முன்முரமாக இருந்தனர் அனைவரும் .தூரத்தில் யாரோ ஓடி வருவது போல தெரிந்தது. “அங்க பாரன் இவன இழுபட்டு வாரான் ஊ ஊ“ என்று இருளியை பகுடி பண்னிய படியே தங்களது போத்தள்களை நிறைத்துக் கொண்டனர் . கரட்டை முதலில் சீறுநீரை நிறைத்து விட்டு வேகமான இருளியை நேக்கி வந்தான். இருளியே களைத்து முச்சி இரைக்க ஓட்டமும் நடையுமான குழாய் கிணறை அடைந்தான்.
இருளி கரட்டையை கண்டு கொஞ்சம் புண்ணகைக்க கரட்டையே ஓங்கி ஒரு உதை விட்டான்
“ஏன்டா அடிக்கா நாயே அடிக்கா” என்றான் கோபத்தில் இருளி. “என்னட நாயே இது” என்டு இருளியின் காற்சட்டையை நோக்கி கையை காண்பித்தான் கரட்டை … அப்போதுதான் பார்க்கிறான் இருளி காற்சட்டை இரமாக இருந்தது .. தன் தலையில் கை வைத்தான். கால் இடரி விழுந்ததில் அன்று மதியத்தில் இருந்து அடக்கி வைத்திருந்த சீறுநீர் அவன் கற்ச்சட்டையில் படர்ந்து இரமாக்கி இருந்தது. “கிட இன்டைக்கு தண்ணீ இல்ல உனக்கு” என்றான் கரட்டை
சற்று கண் கலங்க நீலத்திலயே கிடந்தான் இருளி .. அனைவரும் குழாய் கிணறை சுற்றி நின்றனர் சீறுநீர் நிரப்ப பட்ட போத்தல்களை குழாயின் பின்புறன் அடுக்கினர். இரண்டு சிறுவர் குழாய் கம்பியை மேலும் கீலும் அடிகக்க நின்றனர். கரட்ட குழாய்க்கு நடுவே சீறுநீரை ஊற்ற தயாராகினான்.
கரட்டையின் போத்தல் முதலில் குழாய் கிணரின் நடுவே ஊற்றப்பட்டது . அதை தொடர்ந்து ஒவ்வொருத்தரினதும் போத்தல்கள் ஊற்றப்பட்டடு குழாய் கம்பிகள் வேகமாக அடிக்கத் தொடங்கினர். அடித்தடித்து களைத்தவர்கள் ஓரமாக அமர மற்றவர் வேலையை தொடர்தனர். தண்ணீர் வரும் எந்த அறிகுறியும் காணவில்லை. ஆனால் ஒருவர் முகத்திலும் கவலையில்லை தினசரி வேலை போல அழுக்காமல் செய்தனர்.
கவலையுடன் நடக்கும் யாவற்றையும் பார்த்தபடி குந்திக் கொண்டிருந்தான் இருளி. “ஆ அடி நல்ல அடி” என்று சத்தம் இட்டுக் கொண்டிருந்தான் கரட்டை . இருளிக்கு சீறுநீர் வருவது போல ஓரு உணர்வு போத்தலை பிடித்தபடி சீறுநீரை கொஞ்சமும் கீழே விடாமல் எடுக்க முயற்ச்சித்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்து சிரிந்துக் கொண்டு குழாய் கிணரின் நடுவே சீறுநீரை ஊற்றுவதும் அடிப்பதுமாக இருந்தனர் யாவரும். அனைவரின் சிரிப்பை அடக்குவது போல வெண்நிற சீறுநீர் போத்தலில் நிரைந்தது சந்தேசத்தில் வாய் கிழிவது போல சிரித்துக் கொண்டே இருளி போத்தலில் சீறுநீரை நிரைத்தான் பொழுது புலர்ந்து வானம் கருப்பாக வீட்டில் லாம்பு குப்பியினை பற்ற வைத்தால் செக்கி. அந்த குழாய் கிணரில் நீரடிக்கும் சத்தம் ஊரை எட்டியது…
“மிகச் சிறந்த நிறைவு என்பது தாகத்தின் போது கிடைக்கும் முதல் துளி நீர்தான்”
0 கருத்துகள்